சதுப்புநில தாவரங்கள் வெட்டிய மூன்று நபர்கள் (03) கடற்படையினரால் கைது
2020 ஏப்ரல் 23 ஆம் திகதி மன்னார் திருகேதிஸ்வரம் களப்பு பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்துப் பணியின் போது சதுப்புநில தாவரங்கள் வெட்டிய மூன்று நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை கடற்படை கடலின் பாதுகாப்பிற்கும், கடல் சுற்றுச்சூழல் மற்றும் மீன் வளங்களின் பாதுகாப்பிற்கும் தொடர்ந்து பங்களித்துள்ளது. அதன் படி வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் மன்னார் திருகேதிஸ்வரம் களப்பு பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்துப் பணியின் போது சதுப்புநில தாவரங்கள் வெட்டிய 03 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அங்கு அவர்களிடமிருந்து சதுப்புநில தாவரங்களை வெட்டுவதற்கு பயன்படுத்திய ஒரு கத்தி, ஒரு படகு மற்றும் வெளிப்புற எரிப்பு இயந்திரம் ஆகியவற்றை கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர்கள் 31 முதல் 42 வயதுக்குட்பட்ட மன்னார் பகுதியில் வசிப்பவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நபர்கள், மீன்பிடி படகு சதுப்பு நிலங்கள் மற்றும் பிற உபகரணங்களை மேலதிக விசாரணைகளுக்காக மடு வனவிலங்கு பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடலோர அரிப்பைத் தடுக்க மிகவும் உதவியான இந்த சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகள் சிலரால் அழிக்கப்படுகின்றன. கடற்படை அத்தகைய குழுக்களின் முயற்சிகளைத் தடுக்கவும், அவர்களுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்தவும் செயல்பட்டு வருகிறது.