சட்டவிரோத மதுபானங்களை தயாரித்த மற்றும் விற்பனை செய்த நான்கு நபர்கள் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படை 2020 ஏப்ரல் 22 ஆம் திகதி புத்தலம் சேதபொல பகுதியில் நடத்திய ரோந்து நடவடிக்கையின் மற்றும் 2020 ஏப்ரல் 22 மற்றும் 23 திகதிகளில் வெண்ணப்புவ பகுதியில் நடத்திய சிறப்பு தேடல் நடவடிக்கையின், சட்டவிரோத மதுபானங்களை தயாரித்த மற்றும் விற்பனை செய்த மூன்று இடங்கள் சோதனை செய்தனர். அப்போது சட்டவிரோத உள்நாட்டு மதுபானம், கோடா மற்றும் மதுபானங்கள் தயாரிக்கப் பயன்படுத்திய பிற உபகரணங்களுடன் நாங்கு (04) நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் 2020 ஏப்ரல் 22 ஆம் திகதி புத்தளம் சேதபொல பகுதியில் நடத்திய ரோந்துப்பணியின் போது, காட்டுப் பகுதியில் ரகசியமாக மதுபானம் தயாரித்த இடமொன்று சோதனை செய்யப்பட்டதுடன் அங்கிருந்து சுமார் 50 உள்ளூர் மது போத்தல்கள், சுமார் 530 கோடா போத்தல்கள் மற்றும் மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட சில உபகரணங்களுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும், 2020 ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் வெண்ணப்புவ பகுதியில் இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட மற்றொரு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக மதுபானங்களை தயாரித்த இடமொன்று சோதனை செய்யப்பட்டதுடன் அங்கு மதுபானங்கள் வடிகட்டிய ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபருடன், சுமார் 15 சட்டவிரோத மது போத்தல்கள், 25 கோடா போத்தல்கள் மற்றும் மதுபானங்களை வடிகட்டப் பயன்படும் பல உபகரணங்கள் கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 21-51 வயதுக்குட்பட்ட கரம்ப, மாம்புரி, வென்னப்புவ மற்றும் வைக்காலை ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் உள்ளூர் மதுபானம், கோடா மற்றும் மதுபானங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மேலதிக விசாரணைகளுக்காக நொரொச்சோலை மற்றும் வென்னப்புவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.