தடைசெய்யப்பட்ட பல வலைகள் கடற்படையினரால் கைது
நிலாவேலி மற்றும் மட்டக்களப்பு பகுதியில் ஏப்ரல் 19 மற்றும் 20 திகதிகளில் கடற்படை மேற்கொண்ட ரோந்து நடவடிக்கைகளின் போது ஏராளமான சட்டவிரோத வலைகளை கடற்படை கைப்பற்றியது.
தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற நபர்களை கைது செய்ய கடற்படை பல ரோந்து பணிகளை மேற்கொள்கிறது.அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் 2020 ஏப்ரல் 19 ஆம் திகதி நிலாவேலி, எரக்கண்டி பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் பொது ஒரு மீன்பிடிப் படகில் மற்றும் மீன்பிடி குடிசையில் இருந்த ஆறு தடைசெய்யப்பட்ட வலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், 2020 ஏப்ரல் 20 ஆம் திகதி மட்டக்களப்பு பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்துப் பயணத்தின் போது, களைப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த 03 தடைசெய்யப்பட்ட வலைகள் கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்டது.
கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்ட இந்த தடைசெய்யப்பட்ட வலைகள் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை மற்றும் மட்டக்களைப்பு உதவி மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டன.