கடலில் விரிக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலையொன்று கடற்படை கண்டுபிடித்துள்ளது
2020 ஏப்ரல் 19 ஆம் திகதி திருகோணமலை துறைமுக கடல் பகுதியில் நடத்தப்பட்ட ரோந்துப் பணியின் போது, கடலில் விரிக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலையொன்று கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டது.
கடல் சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்கும் நோக்கில், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்ய இலங்கை கடற்படை பல ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி 2020 ஏப்ரல் 19 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்திற்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள இதேபோன்ற ரோந்துப்பணியின் போது, கிழக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் குழு இந்த தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலையை கண்டுபிடித்தது.
இவ்வாரு, கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி வலையை இலங்கை கடலோர காவல்படை மூலம் திருகோணமலை உதவி மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.