கெலனி ஆற்றில் மூழ்கிக் கொண்டிருந்த நபர் கடற்படையால் மீட்பு

பேலியகொடை புதிய கெலனி பாலம் அருகே கெலானி ஆற்றில் மூழ்கிக் கொண்டிருந்த ஒருவரை மீட்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

காகதீவு கடற்படை உப முகாமில் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் குழு கெலானி ஆற்றில் ரோந்து செல்லும் போது நீரில் மூழ்கிக் கொண்டிருந்த ஒரு நபரை கண்கானித்தனர். இந்த நிலைமைக்கு உடனடியாக பதிலளித்த கடற்படை வீரர்கள் அந்த நபரை விரைவாக மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட நபர் கொட்டாஞ்சேனை பகுதியில் வசிக்கும் 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர் ரோந்துப் பணியில் ஈடுபட்ட கிராண்ட்பாஸ் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.