ஒலுவில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்ட நபர்களின் மூன்று (03) நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்தது.
ஒலுவிலில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்ட மூன்று நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதுடன் கடற்படை உடனடியாக 2020 ஏப்ரல் 18 அன்று அவர்களை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளது.ි.
ஜா-எல சுதுவெல்ல பிரதேசத்தில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 28 பேர் குறித்த சுய தனிமைப்படுத்தலை மீறியமை தொடர்பில் 2020 ஏப்ரல் 09 ஆம் திகதி கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்டு முறையான தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்காக ஒலுவில் உள்ள இலங்கை கடற்படையின் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பப்பட்டனர். அதன் படி, இந்த நபர்கள் 2020 ஏப்ரல் 17, அன்று பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் சோதனை முடிவில் அவர்களில் 03 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்தது.
அதன்படி, 2020 ஏப்ரல் 18, அன்று, வைரஸால் பாதிக்கப்பட்ட மூன்று நபர்களையும் கடற்படை பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலம் இரனவில நகரில் நிறுவப்பட்ட COVID-19 சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.