கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவருடன் தொடர்பு கொண்டிருந்த மேலும் ஆறு நபர்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவருடன் தொடர்பு கொண்டிருந்த கிராண்ட்பாஸ், கொட்டாஞ்சேனை, மாலிகாவத்த மற்றும் புஞ்சி பொரெல்ல பகுதிகளில் வசிக்கும் ஆறு (06) நபர்களை இன்று (2020 ஏப்ரல் 16,) தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு அனுப்ப கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த கொழும்புப் பகுதிச் சேந்தவர்களைத் தேடி கடற்படை புலனாய்வு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதேபோன்ற நடவடிக்கையின் போது மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த இந்த 06 நபர்களை கடற்படையால் கண்டறியப்பட்டனர். நிலவும் சூழ்நிலை காரணமாக, இப்பகுதியில் வசிப்பவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இவர்கள் ஆரம்ப சுகாதார பரிசோதனைக்கு பின்னர் வெலிசறை சுவாச நோய்க்கான வைத்தியசாலையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பப்பட்டனர்.