சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த ஒருவர் கைது செய்ய கடற்படை உதவி
கடற்படை மற்றும் காவல்துறை இணைந்து 2020 ஏப்ரல் 17 ஆம் திகதி கல்முனை பகுதியில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தீவு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அரசாங்கம் விதித்துள்ள நிலையில், நாட்டில் சட்டவிரோதமாக போதைப்பொருள் மற்றும் மதுபான விற்பனையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை கடற்படை மேற்கொண்டு வருகிறது. அதன் படி, தென்கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் கல்முனை காவல்துறையினர் இனைந்து கல்முனை பகுதியில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது தலவட்டன் சந்தியில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்த ஒருவருடன் எழுபத்தி ஆறு (76) மது பொத்தல்கள் கைது செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட நபர் 35 வயதான அனுபுவலிபுரம், பண்டிரிப்பு பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கல்முனை பொலிஸாசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.