போதைப் பொருள் கொண்ட மூன்று நபர்கள் கடற்படையினரால் கைது

2020 ஏப்ரல் 16 ஆம் திகதி கடற்படை பொலிஸாருடன் புல்முடை யான் ஓய சாலைத் தடையில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தேடலின் போது கஞ்சா மற்றும் ஹெராயின் வைத்திருந்த 03 சந்தேக நபர்கள் கைது செய்யப்’பட்டனர்.

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்காக அடிக்கடி பங்களிப்பு செய்து வரும் கடற்படை, 2020 ஏப்ரல் 16 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் மற்றும் யான் ஓய சாலைத் தடையில் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளுடன் தேடுதல் நடவடிக்கை யொன்று மேற்கொண்டுள்ளது. அதன்படி, சந்தேகத்திற்கிடமான 02 மோட்டார் சைக்கிள்களை சாலைத் தடையில் தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது மோட்டார் சைக்கிள்களில் பயணித்த மூன்று நபர்களிடமிருந்து 30 கிராம் கஞ்சா மற்றும் 05 கிராம் ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சந்தேகநபர்கள் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் கைது செய்யப்பட்டன.

சந்தேக நபர்கள் 22 முதல் 32 வயது வரையிலான புடுவக்கட்டு மற்றும் குச்சவேலி பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சட்டவிரோத போதைப்பொருட்கள் புல்முடை பொலிஸாரிடம் ஒப்படைக்கபட்டன.