சட்டவிரோத உள்ளூர் மதுபானங்களை தயாரித்த ஒரு பெண் கடற்படையால் கைது
இலங்கை கடற்படை 2020 ஏப்ரல் 15 ஆம் திகதி, கற்பிட்டி, உச்சமுனை பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத உள்ளூர் மது உற்பத்தி செய்யப்படும் இடமொன்று சோதனை செய்யப்பட்டதுடன் அங்குரிந்து சட்டவிரோத உள்ளூர் மதுபானங்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டன.
நாட்டில் புதிய கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் அதே வேளையில், நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தவும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கவும் இலங்கை கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் 2020 ஏப்ரல் 15 ஆம் திகதி கற்பிட்டி, உச்சமுனை பகுதியில் மெற்கொண்டுள்ள மற்றொரு நடவடிக்கையில் ஒரு சட்டவிரோத மதுபானம் தயாரிக்கும் மையம் சோதனை செய்யப்பட்டதுடன் அங்கு இருந்து ஒரு பெண் சட்டவிரோத மதுபானத்துடன் கைது செய்யப்பட்டார். மேலும், சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சுமார் 150 லிட்டர் கோடா, 36 லிட்டர் சட்டவிரோத மதுபானம் மற்றும் மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சில உபகரணங்கள் கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்டன.
இவ்வாரு குற்றம் சாட்டப்பட்ட 49 வயதான பெண் இப்பகுதியில் வசிக்கின்றதாக அடையாளம் காணப்பட்டதுடன் குறித்த பெண், சட்டவிரோத மதுபானம், வடிகட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் கோடா மேலதிக விசாரணைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.