ஹெரொயின் கொண்ட 08 சந்தேக நபர்களை கைது செய்ய கடற்படை உதவி

2020 ஏப்ரல் 15 ஆம் திகதி மன்னார் சவுத்பார் பகுதியில் ஹெராயினுடன் எட்டு சந்தேக நபர்கள் கடற்படை மற்றும் மன்னார் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

போதைப்பொருள் கடத்தலை ஒழிக்கும் தேசிய பணிக்கு ஆதரவாக இலங்கை கடற்படை மேற்கொண்ட பல நடவடிக்கைகள் மூலம் ஏராளமான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர். அதன்படி, மன்னார் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவின் ஒத்துழைப்புடன் வட மத்திய கடற்படை கட்டளை மேற்கொண்ட மற்றொரு நடவடிக்கை 2020 ஏப்ரல் 15 அன்று மன்னாரின் சவுத் பார் பகுதியில் நடத்தப்பட்டன. அங்கு சந்தேகத்திற்குரிய எட்டு நபர்கள் கண்கானிக்கபட்டதுடன் அவர்களை மெலும் சோதனை செய்த போது அவர்களிடம் 1020 மில்லிகிராம் ஹெராயின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் படி ஹெராயின் கொண்ட 08 நபர்களை கடற்படையால் கைது செய்யப்பட்டது.

சந்தேக நபர்கள் நீர்கொழும்பு மற்றும் மன்னார் பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஹெரொயினுடன் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.