கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையின் வசதிகளை கடற்படை விரிவுபடுத்தியுள்ளது

கொரோனா வைரஸ் நாட்டில் பரவியதன் விளைவாக, கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள சிகிச்சையை வழங்குவதற்காக இலங்கை கடற்படை புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் உபகரணங்களை அரசு கொரோனா நோய் சந்தேகத்திற்குரிய கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையாக நவீனப்படுத்தியுள்ள நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலைக்கு இன்று 2020 ஏபரல் 15 ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது.

கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதைக் கட்டுப்படுத்த கடற்படை பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மெலும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஒரு பாராட்டத்தக்க வேலையைச் செய்து வரும் சுகாதாரப் பணியாளர்களின் வசதிகளை மேம்படுத்த கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் நேரடி மேற்பார்வையின் கீழ் பல திட்டங்கள் கடற்படை மெற்கொண்டு வருகிறது.

இந்த திட்டத் தொடரின் கீழ், நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையில் கடற்படையின் உதவியுடன் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதன் படி, நோயாளிகளை அனுமதிப்பதற்கும் வெளிப்புற மாதிரி சோதனை செய்வதற்கும் ஒரு கட்டிடத்தை நிர்மாணித்தல், சமூக தூரத்தை பராமரித்து நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான கேமரா அமைப்பை நிறுவுதல், நோயாளிகளுடன் தொடர்புகொள்வதற்கும் மருத்துவ உதவிகளை வழங்குவதற்கும் மெட்மெட் (Medimate) தானியங்கி இயந்திரம் வழங்குதல், மருத்துவமனை ஊழியர்களின் பாதுகாப்பிற்காக வைத்தியசாலை வளாகத்தில் ஒரு கிருமிநாசினி அறை நிறுவுதல், சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் ஆடைகளை கருத்தடை செய்வதற்கு ஒரு உயர் வெப்பநிலை அறை அமைத்தல், நோயாளிகள் பயணிக்கும் பகுதிகளை கருத்தடை செய்வதற்காக மருத்துவமனையின் இரண்டு வளாகங்களில் அகச்சிவப்பு அமைப்பை நிறுவுதல், மருத்துவமனையின் லிஃப்ட் ஆகியவற்றிற்கான பாதுகாப்பு பொறிமுறையுடன் மின்னணு கண்காணிப்பு அமைப்பை நிறுவுதல் மற்றும் பல உபகரனங்கள் வழங்கப்பட்டன.

அதன் படி மேம்படுத்தப்பட்ட பல வசதிகள் மற்றும் உபகரணங்கள் தற்போது வைத்தியசாலையில் நடைமுறையில் இருந்தாலும் அதை அதிகாரப்பூர்வமாக வைத்தியசாலைக்கு வழங்கும் விழா 2020 ஏப்ரல் 15 ஆம் திகதி பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவம் அமைச்சர் கெளரவ பவித்ரா வன்னியராச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்க மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேசிய சுகாதார அமைச்சர், நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு கடற்படை செய்த பங்களிப்புக்கு தனது நன்றியைத் தெரிவித்ததோடு, இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் கடற்படை வழங்கிய சுகாதார சேவைகளைப் பாராட்டினர்.

அதே நேரத்தில், நாட்டில் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் கூட்டு பொறிமுறையை வலுப்படுத்த கடற்படை தங்கள் அதிகபட்ச ஆதரவை வழங்குகிறது, மேலும் இதுக்காக அனைத்தையும் செய்ய கடற்படை தொடர்ந்து தயாராகி வருகிறது.