120 கிலோகிராம் கேரளா கஞ்சா கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டது
2020 ஏப்ரல் 15 ஆம் திகதி மன்னாருக்கு தெற்கு கடல் பகுதியில் நடத்தப்பட்ட ரோந்துப் நடவடிக்கையின் போது சுமார் 120 கிலோகிராம் கேரள கஞ்சா ஏற்றிச் சென்ற டிங்கி படகொன்றுடன் மூன்று (03) சந்தேக நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டது.
கடல் வழியாக கடத்தப்படும் போதைப்பொருட்களைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி, மன்னாருக்கு தெற்கு கடல் பகுதியில் ரோந்து சென்ற இலங்கை கடற்படை கப்பல் மிஹிகத மூலம் வேகமாக நகரும் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று கண்கானிக்கப்பட்டது. பின்னர், கடற்படைக் கப்பல் மிஹிகத சந்தேகத்திற்கிடமான டிங்கி படகுப் பின் தொடர்ந்து சென்றது. மேலும், கடற்படையின் உத்தரவுகளை மீறி, பல பொட்டலங்கள் கப்பலில் இருந்து கடலுக்கு வீசப்பட்டதைக் கண்ட மிஹிகத கப்பலின் கடற்படையினர் இலங்கை கடலோர காவல்படை கப்பல் சமரக்ஷாவின் உதவியுடன், அந்த பொட்டலங்களை மீட்கப்பட்டு சந்தேகத்திற்கிடமான டிங்கி படகை கடற்படை காவலுக்கு எடுத்துள்ளது. மேலதிக விசாரணையின் போது 05 பார்சல்களில் 120 கிலோகிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தேக நபர்களுடன் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு, ஒரு ஜி.பி.எஸ், ஒரு வெளிப்புற மோட்டார் மற்றும் பல உபகரணங்கள் கடற்படையின் காவலுக்கு எடுக்கப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் கற்பிட்டி பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் கஞ்சா, டிங்கி படகு மற்றும் பிற உபகரணங்கள் மன்னார் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டன.
|