நாகலங்கம மற்றும் வேள்ளவீதியில் மேலும் 100 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டனர்

ஜா- எல சுதுவெல்ல கிராமத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை தவிர்த்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தொடர்பு கொண்டிருந்த கொழும்பு, குணசிங்கபுர, வேள்ளவீதிய, கிராண்ட்பாஸ் மற்றும் நாகலங்கம பகுதிகளைச் சேர்ந்த மேலும் 100 பேர் இன்று (2020 ஏப்ரல் 15,) திருகோணமலை சாம்பூர் பகுதியில் உள்ள இலங்கை கடற்படை மரைனின் தலைமையகத்தில் அமைக்கப்பட்ட கடற்படை தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பப்பட்டனர்.

ஜா-எல சுதுவெல்ல பிரதேசத்தில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 28 பேர் குறித்த சுய தனிமைப்படுத்தலை மீறியமை தொடர்பில் 2020 ஏப்ரல் 09 ஆம் திகதி கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்டு முறையான தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்காக அனுப்பப்பட்டனர். அங்கு அனுப்பப்பட்ட குழுவின் 6 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் என கண்டறியப்பட்டது.

இவர்களில் சிலருடன் தொடர்பு கொண்டிருந்த கொழும்பு, குணசிங்கபுர, வேள்ளவீதிய, கிராண்ட்பாஸ் மற்றும் நாகலங்கம பகுதிகளைச் சேர்ந்த சுமார் 100 பேர் இன்று (2020 ஏப்ரல் 15) தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்காக அனுப்பப்பட்டனர் . இந்த குழுவில் 07 பெண்கள் மற்றும் 93 ஆண்கள் உள்ளனர்., அவர்கள் ஆரம்ப சுகாதார பரிசோதனைக்கு பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பப்பட்டனர். நிலவும் சூழ்நிலை காரணமாக, இப்பகுதியில் வசிப்பவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவர்கள் ஆரம்ப சுகாதார பரிசோதனைக்கு பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பப்பட்டது.