ஹெரொயின் கொண்ட இரண்டு நபர்கள் கடற்படையினரால் கைது
2020 ஏப்ரல் 14 ஆம் திகதி வெண்ணப்புவ பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, 4.8 கிராம் ஹெரொயினுடன் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு சூழ்நிலையை கட்டுப்படுத்த மகத்தான பங்களிப்பை வழங்குகின்ற கடற்படை, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளையும் தொடர்கிறது. அதன்படி, வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் 2020 ஏப்ரல் 14 ஆம் திகதி வெண்ணப்புவ பகுதியில் மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் போது மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரு சந்தேக நபரை கண்கானித்தனர். குறித்த நபரை மேலும் சோதனை செய்த கடற்படையினர் அவரிடமிருந்து 2.5 கிராம் ஹெரொயின் கண்டுபிடித்தனர். மேலும் சந்தேக நபரிடம் கிடைத்த தகவலின் படி, மற்றொரு சந்தேக நபர் அவரது இல்லத்திற்கு அருகில் 2.3 கிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர்கள், 23 முதல் 40 வயதுக்குட்பட்ட அப்பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். மோட்டார் சைக்கிள், ஹெராயின் மற்றும் சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வென்னப்புவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.