சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு (06) நபர்கள் கடற்படையினரால் கைது
திருகோணமலை, சல்பெயாரு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 06 பேரை 2020 ஏப்ரல் 13 ஆம் திகதி கடற்படை கைது செய்தது.
கடல் வளங்களை மற்றும் மீன் வளங்களை பாதுகாக்கும் நோக்கில் இலங்கை கடற்படை பல ரோந்துப் பணிகளை கடலில் மேற்கொள்கிறது. அதன் படி 2020 ஏப்ரல் 13 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் சல்பெயாரு கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று கண்டுபிடித்தனர். குறித்த படகு மேலும் சோதனை செய்த போது சுழியோடி நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 06 பேர் மற்றும் பல சுழியோடி உபகரனங்கள் கைது செய்யப்பட்டது. அங்கு சந்தேக நபர்கள், படகு, பல சுழியோடி உபகரனங்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர்கள், 24 முதல் 44 வயதுக்குட்பட்ட திருகோணமலை, பொடுவக்கட்டு பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர், மேலும் சந்தெகநபர்கள் மற்றும் பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக குச்சவேலி மீன்வள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.