ஹெரொயின் கொண்ட இரண்டு நபர்கள் கடற்படையால் கைது

2020 ஏப்ரல் 13 ஆம் திகதி புத்தலம் அலன்குடா பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, 6 கிராம் மற்றும் 450 மில்லிகிராம் ஹெராயின் உடன் ஒரு ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்காக இலங்கை கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற மற்றொரு நடவடிக்கையை வடமேற்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படையினர் குழு புத்தலம் ஆலங்குடா பகுதியில் மேற்கொண்டது. அங்கு சந்தேகத்திற்கிடமான ஒரு வீட்டை சோதனை செய்த போது விட்டிலிருந்து 6 கிராம் மற்றும் 450 மில்லிகிராம் ஹெராயின் மற்றும் ரூபா 40,700.00 பணம் கண்டுபிடிக்கப்பட்டதுடன் வீட்டிலிருந்த ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் (01) கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் 40 மற்றும் 50 வயதுடையவர்கள் என கண்டறியப்பட்டதுடன் சந்தேக நபர்கள் ஹெராயின் மற்றும் பணம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நொரொச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.