ஜா-எல சுதுவெல்ல பகுதியிலிருந்து கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிய 28 நபர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த மேலும் 32 நபர்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டனர்.
ஜா-எல சுதுவெல்ல பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை தவிர்த்து கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பு கொண்டிருந்த ஜா-எல, மட்டக்குலி மற்றும் ராகமை பகுதிகளைச் சேர்ந்த 32 நபர்கள் 2020 ஏப்ரல் 13 ஆம் திகதி மன்னார், நச்சிகுடாவில் உள்ள இலங்கை கடற்படையின் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பப்பட்டனர்.
ஜா-எல சுதுவெல்ல பிரதேசத்தில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 28 பேர் குறித்த சுய தனிமைப்படுத்தலை மீறியமை தொடர்பில் 2020 ஏப்ரல் 09 ஆம் திகதி கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்டு முறையான தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்காக அனுப்பப்பட்டனர். அங்கு அனுப்பப்பட்ட குழுவின் 6 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் என கண்டறியப்பட்டது.
இந்த நபர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட ஜா-எல, மட்டக்குலி மற்றும் ராகமை பகுதிகளைச் சேர்ந்த மேலும் 32 நபர்கள் கடற்படையினரால் அடையாளம் கண்டுள்ளதுடன் இந்த குழுவின் ஒரு பெண்னுக்கு கொவிட் 19 அறிகுறிகளைக் காணப்பட்டதால் மருத்துவ பரிசோதனைக்காக பொலன்னறுவை வெலிகந்த அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. மீதமுள்ள 31 நபர்களை மன்னார் நச்சிகுடாவில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பப்பட்டனர். 31 நபர்களில் 06 பெண்கள், 17 ஆண்கள் மற்றும் 08 குழந்தைகள் உள்ளனர்.
|