பருத்தித்துறை, மணல்காடு கடல் பகுதியில் கஞ்சா கடத்திக்கொண்டிருந்த டிங்கி படகொன்று கடற்படையினரால் கைது
நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக, இலங்கை கடல் பகுதி முழுவதும் ரோந்துப் பணிகளை வலுப்படுத்த கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த ரோந்துகளின் விளைவாக, வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் இன்று (2020 ஏப்ரல் 13) பருத்தித்துறை மணல்காடு கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான டிங்கி ஒன்றைக் கண்டுபிடித்தனர். குறித்த படகு மேலும் சோதனை செய்த போது 05 சாக்குகளில் இருந்த 133 கிலோ மற்றும் 57 கிராம் கஞ்சாவைக் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்படி, சந்தேக நபர்கள், டிங்கி படகு மற்றும் கஞ்சா பொதி கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்டது. சந்தேக நபர்கள் 22, 26 மற்றும் 37 வயதுடைய பருத்தித்துறை பகுதியில் குடியிருப்பாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். இந்த கஞ்சா கடலில் ஒரு வெளிநாட்டுக் கப்பலில் இருந்து சந்தேகத்திற்கிடமான டிங்கிக்கு மாற்றப்பட்டது. இருப்பினும், இந்த சம்பவம் குறித்து இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
|