செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட 18 நபர்கள் கடற்படையினரால் கைது

திருகோணமலை எலிசபெத் தீவுக்கு அப்பால் கடல் பகுதியில் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடித்த 18 பேரை 2020 ஏப்ரல் 12 ஆம் திகதி கடற்படை கைது செய்தது.

இலங்கை கடல் பகுதியில் கடல் வளங்களை மற்றும் மீன் வளங்களை பாதுகாக்க இலங்கை கடற்படை தொடர்ந்து பாதுகாப்பு ரோந்து பணிகளை நடத்துகிறது. அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான ஒரு கடற்படை ரோந்து கப்பல், 2020 ஏப்ரல் 12 ஆம் திகதி திருகோணமலை எலிசபெத் தீவுக்கு அப்பால் கடல் பகுதியில் மெற்கொண்டுள்ள ரொந்து நடவடிக்கையின் பொது சந்தேகத்திற்கிடமான பல டிங்கிகளைக் கண்டறிந்தது குறித்த படகுகள் மேலும் சோதனை செய்த போது சட்டவிரோதமாக செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரங்கள் இல்லாமல் சுழியோடி நடவடிக்கை மூலம் மீன்பிடித்த 18 நபர்களுடன் 06 படகுகள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் பல மீன்பிடி உபகரணங்கள் கைது செய்துள்ளது.

இவ்வாரு கைது செய்யப்பட்ட நபர்கள், 28 முதல் 55 வயதுக்குட்பட்ட திருகோணமலை பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள், டிங்கி படகு, சுழியோடி உபகரனங்கள் மற்றும் மீன்பிடி உபகரனங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை உதவி மீன்வள அலுவலகத்திற்கு இலங்கை கடலோர காவல்படையினரால் ஒப்படைக்கப்பட்டது.