பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா வடக்கு கடற்படை கட்டளை தலைமையகத்திற்கு விஜயம்

பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா 2020 ஏப்ரல் 12 அன்று வடக்கு கடற்படை கட்டளை தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டார்.

வடக்கு கடற்படை கட்டளை தலைமையகத்திற்கு வருகை தந்த பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவை கடற்படை பாரம்பரியமாக அன்புடன் வரவேற்கப்பட்டது. இங்கு அவர் மற்றும் கடற்படைத் துணைத் தளபதி மற்றும் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர இடையில் கோவிட் 19 தொற்றுநோய் எவ்வாறு வடக்கு மாகாணத்தை பாதித்துள்ளது என்பது குறித்து ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. மேலும் வடக்கு கடற்படை கட்டளையின் செயல்பாட்டு அதிகாரி கொரோனா தொற்றுநோயை எதிர்கொள்ளும் ஏற்பாடுகள் மற்றும் இந்த தொற்றுநோயால் புலம்பெயர்ந்தோர் கடல் வழியாக நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவத் தளபதிக்கு விளக்கினார்.

இங்கு போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத கடத்தல்களை எதிர்த்து இலங்கை கடற்படை மேற்கொண்ட நடவடிக்கைகளை பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவப் தளபதி அவர்களினால் பாராட்டப்பட்டது. மேலும் காங்கேசந்துரை துறைமுகத்தில் நடைபெற்று வரும் புதிய இறங்கு துறையின் கட்டுமானத் திட்டத்தையும் இவர் கண்காணித்தார். இந் நிகழ்வுக்காக வடக்கு கடற்படை கட்டளையின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.