கிங்தொட்டை பகுதியில் கைப்பற்றப்பட்ட முதலை கடற்படை வனவிலங்குத் துறையிடம் ஒப்படைத்தது.

காலி கிங்தொட்டை பகுதியில் வசிப்பவர்களின் உதவியுடன் கடற்படை ஒரு முதலை கவனமாகப் பிடித்து இன்று (2020 ஏப்ரல் 12,) வனவிலங்கு பாதுகாப்புத் துறையிடம் ஒப்படைத்தது.

ஏறக்குறைய 10 அடி நீளமுள்ள இந்த முதலை இப்பகுதியில் பல நாட்களாக காணப்படுள்ளது. இதற்கிடையில், இந்த முதலை குறித்து இப் பகுதியில் வசிப்பவர் கிங்தொட்டை சாலைத் தடையில் உள்ள கடற்படை வீரர்களுக்கு கூறியுள்ளனர். அதன் படி, தெற்கு கடற்படை கட்டளை மூலம் இந்த முதலை குறித்து வனவிலங்குத் துறைக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, கிராமத்திற்கு முதலை நுழைவதைத் தடுக்க அப்பகுதி மக்களின் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதலை கைப்பற்றிய பின்னர், அதை வனவிலங்கு துறையால் பூண்தல தேசிய பூங்காவிற்கு விடுவித்தது. குறித்த விலங்கு துன்புறுத்தல் இல்லாமல் பொருத்தமான சூழலுக்கு விடுவிப்பதற்கான விரைவான ஏற்பாடுகள் செய்யப்பட்டதன் விளைவாக, முதலை ஏற்படுத்தும் ஆபத்துகளின் நாம் தவிர்க்கலாம்.