கடற்படை தயாரித்த இரண்டாவது மெடி மேட் (Medi mate) இயந்திரம் கலுபோவில போதனா வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டன
இலங்கை கடற்படையால் தயாரிக்கப்பட்ட மற்றொரு மெடி மேட் (Medi mate) தொலை கட்டுப்பாட்டு தானியங்கி சாதனம் இன்று (2020 ஏப்ரல் 12,) கலுபோவில தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது.
ஒரு கண்டுபிடிப்பாளரான துஷார கெலும் வடசிங்க அவர்களின் அடிப்படை கருத்தை கவணத்தில் கொண்டு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் நேரடி மேற்பார்வையின் கீழ், மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளிடம் செல்லாமல் அவர்களின் அறிகுறிகளைக் கண்டறிய முடியும் தொலை கட்டுப்பாட்டால் செயல்படுகின்ற மெடிமேட் (Medimate) என்ற தானியங்கி சாதனயொன்று கடற்படை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு தனது புதிய தொழில்நுட்பத்தை பகண்படுத்தி உருவாக்கியது. இவ்வாரு உருவாக்கப்பட்ட 'மெடி மேட்' என்ற தொலை கட்டுப்பாட்டு தானியங்கி சாதனமொன்றை நெவில் பெர்னாண்டோ மருத்துவமனைக்கு கடற்படை சமீபத்தில் ஒப்படைத்தது. இதேபோன்ற தானியங்கி சாதனமொன்று இயக்குனர் கடற்படை மின் மற்றும் மின்னணு பொறியியல் (நிர்வாகம் மற்றும் ஆயுதங்கள்), (நிர்வாகம் மற்றும் பயன்பாடுகள்) கமடோர் (மின்) கமல் போம்புகலகே தலைமையில் இன்று (2020 ஏப்ரல் 12) கலுபோவில போதனா மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
இந்த சாதனம் மூலம் நோயாளிகளிடம் செல்லாமல் மருத்துவர்கள் அவகளுடைய அறிகுறிகளைக் கண்டறிய முடிகின்றதுடன் நோயாளிகளுடன் பேசவும், நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்கவும், உணவு மற்றும் பானங்கள் உள்ளிட்ட அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும் உதவுகிறது. மேலும், இது பாதிக்கப்பட்ட நோயாளிகளில் இருந்து மருத்துவ ஊழியர்களுக்கு மற்றும் பிற மருத்துவமனை ஊழியர்களுக்கு வைரஸ் தொற்றும் அபாயத்தைக் குறைக்கும்.
|