கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடற்படை கொழும்பு தேசிய மருத்துவமனையில் மற்றொரு கண்டுபிடிப்பை நிறுவியுள்ளது
இலங்கை கடற்படையால் உருவாக்கப்பட்ட இரண்டு புதிய எதிர்மறை அழுத்தம் தனிப்படுத்தல் அறைகள் (Negative Pressure Isolation Room) இன்று (2020 ஏப்ரல் 11) கொழும்பு தேசிய மருத்துவமனையில் நிறுவப்பட்டன.
புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தேவையான வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கத்தில், இலங்கை கடற்படை 2020 மார்ச் 23 அன்று கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவை புதுப்பித்தது. மேலும், மருத்துவர்கள் நோயாளிகளிடம் செல்லாமல் அவர்களின் அறிகுறிகளைக் கண்டறிய முடியும் தொலை கட்டுப்பாட்டால் செயல்படுகின்ற மெடிமேட் (Medimate) என்ற தானியங்கி சாதனயொன்றும் கடந்த நாட்களில் கடற்படை உருவாக்கியுள்ளது. வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் தளங்களிலிருந்து வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடற்படை புதிய எதிர்மறை அழுத்தம் தனிப்படுத்தல் அறைகள் (Negative Pressure Isolation Room) உருவாக்கியது. இந்த எதிர்மறை அழுத்தம் தனிப்படுத்தல் அறையின் (Negative Pressure Isolation Room) முக்கிய அம்சம் என்னவென்றால், பாதிக்கப்பட்ட நபரால் வெளிப்புற சூழலுக்கு வைரஸை வெளியிடுவதைத் தடுத்து நோயாளி இருக்கும் அறைக்கு மீண்டும் காற்றோட்டம் இழுக்கப்படுகிறது. இதற்கிடையில் அசுத்தமான காற்றில் இருக்கும் வைரஸை ஒரு வெப்பம் மூலம் அழித்த பின்னர் வெளிப்புற சூழலுக்கு வெளியிடப்படும்.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் கட்டளைகளைத் தொடர்ந்து, இந்த எதிர்மறை அழுத்தம் தனிப்படுத்தல் அறைகள் கடற்படை தலைமையகத்தின் பொறியியல் துறையால் வடிவமைக்கப்பட்டன, மேலும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் இவ்வாரான இரண்டு அறைகள் இன்று (2020 ஏப்ரல் 11) நிறுவப்பட்டதுடன் இதன்மூலம், மருத்துவமனைக்கு வருகை தரும் நபர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவமனையில் COVID-19 நோயாளிகளிடமிருந்து பாதுகாக்க முடியும்.
இது தவிர, கடற்படை மருத்துவமனையில் பல கட்டுமான பணிகளையும், மருத்துவமனை வளாகத்தில் சி.சி.டி.வி கேமராக்கள் அமைப்புகளை பொருத்தும் நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ளது. மேலும், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகளை வலுப்படுத்த கடற்படை தனது ஆதரவை வழங்க தயாராக உள்ளது.
|