கடற்படையால் நிர்மானிக்கப்பட்ட மருத்துவ ஊழியர்களுக்கான சுகாதார ஆடைகள் தொகுப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்கிடம் ஒப்படைக்கப்பட்டது

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தேவையான 3400 மருத்துவ உடைகளை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவினால் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்கிடம் இன்று (2020 ஏப்ரல் 11) சுகாதார அமைச்சில் ஒப்படைக்கப்பட்டன.

இதற்கிடையில், இந்த நேரத்தில் ஒரு பெரிய தேவையாக இருந்த இந்த ஆடைகளை தைக்க தேவையான பொருட்கள் நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி மற்றும் வத்தலை கிரியேட்டிவ் டெக்ஸ்டைல்ஸ் (Creative Textiles) ஆகியவற்றால் கடற்படைக்கு வழங்கப்பட்டன.

இவ்வாறு கடற்படைக்கு வழங்கப்பட்ட பொருட்களை பயன்படுத்தி கடற்படை பணிப்பாளர் நாயகம் வழங்கள் ரியர் அட்மிரல் உதய ஹெட்டியாராச்சியின் வழிகாட்டுதலின் கீழ், வெலிசறை கடற்படை தையல் மையத்தில் இந்த ஆடைகளை குறுகிய காலத்தில் தைக்கப்பட்டது. இந்த உன்னத காரணத்திற்காக, கடற்படை தையல் மையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பேரழிவு நிலைமை இருந்தபோதிலும் அவர்களின் ஆதரவை தன்னார்வத் தொண்டு வழங்கினார்கள்.

வெலிசறை கடற்படை தையல் மையத்தில் தைக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 3400 சுகாதார ஆடை தொகுப்புகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்கிடம் இன்று (2020 ஏப்ரல் 11) சுகாதார அமைச்சில் ஒப்படைக்கப்பட்டன. இந்நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி, நேஷன் டிரஸ்ட் வங்கியில் மற்றும் வத்தலை கிரியேட்டிவ் டெக்ஸ்டைல்ஸ் (Creative Textiles) நிருவனத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.