மன்னார், வட்டகண்டாய் பகுதியிலிருந்து நாங்கு 60 மிமி மோட்டார் ரவைகள் கடற்படையினரால் கண்டு பிடிக்கப்பட்டன
மன்னார், வட்டகண்டாய் பகுதியில் 2020 ஏப்ரல் 10 ஆம் திகதி மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது நான்கு மோட்டார் ரவைகள் கடற்படையினரால் கண்டு பிடிக்கப்பட்டன.
அதன் படி வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் 2020 ஏப்ரல் 10 ஆம் திகதி மன்னார், வட்டகண்டாய் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது ஒரு பண்ணைக்கு அருகில் இருந்து துரு பிடித்த நாங்கு 60 மிமி மோட்டார் ரவைகள் கண்டுபிடித்தனர். இந்த மோட்டார் ரவைகள் போர் காலத்தின் போது கைவிடப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகக்கப்படுகிறது. குறித்த மோட்டார் ரவைகள் மேலதிக விசாரணைகளுக்காக அடம்பன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.