போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மற்றொரு கப்பலை கடற்படை கைப்பற்றியது
2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், ஆழ்கடல் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல்கள் வெற்றிகரமான நடவடிக்கைகள் மூலம் ஏராளமான ஹெராயின், ஐஸ் மற்றும் கெட்டமைன் ஆகிய போதைப்பொருளும் போதைப்பொருள் கொண்டு வந்த விற்பனையாளர்கள் மற்றும் பல வெளிநாட்டுக் கப்பல்களும் கைப்பற்றியது.
இதன் விளைவாக, இலங்கையிலிருந்து 548 கடல் மைல் (தோராயமாக 985 கி.மீ) தொலைவில் உள்ள ஒரு மாநிலக் கொடி (Flag Stateless) இல்லாத வெளிநாட்டு கப்பலொன்று கடற்படையினரால் சோதனை செய்யப்பட்டதுடன் அங்கிருந்து 260 கிலோ கிராம் ஹெராயின் மற்றும் 56 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஈரானியர்கள் என்று சந்தேகப்படுகின்ற 07 நபர்கள் கைது செய்யப்பட்டன.
இந்த ஆண்டு தொடக்கத்தில் கைது செய்யப்பட்ட மூன்று கப்பல்களில் இருந்த நபர்களை விசாரிப்பதன் மூலம் பெறப்பட்ட தகவல்கள் மற்றும் சர்வதேச தகவல் பரிமாற்றம், செயற்கைக்கோள் தொலைபேசி தரவு பகுப்பாய்வு செய்யும் போது வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை இலங்கை கடற்படையால் மேற்கொள்ளப்பட்டது.
இந்த பகுப்பாய்வுகளின் அடிப்படையில், மார்ச் 30 அன்று, இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பலொன்று 14 நாள் கடல் ஆய்வு பயணத்திற்காக கடலுக்கு அனுப்பப்பட்டது. 2 நாள் பயணத்திற்குப் பிறகு, கப்பல் பூமத்திய ரேகை தாண்டி, முன்னர் அடையாளம் காணப்பட்ட கடல் வழிகளை கவனித்து ஒன்பது நாட்கள் கழித்தது. 10 வது நாளில் (2020 ஏப்ரல் 10 அன்று சுமார் 1100 மணி) போதைப்பொருட்களை கொண்டு வருகின்ற வெளிநாட்டுக் கப்பலை கண்டுபிடித்துள்ளது. இந்த நடவடிக்கையின் போது சர்வதேச ஒத்துழைப்புடன் செயற்கைக்கோள் படங்களும் பெறப்பட்டன, இது இந்த வழிகளை, குறிப்பாக அணுகுமுறையை உறுதிப்படுத்த உதவியது.
இலங்கை கடற்படை பிரதான கப்பல்கள் மூலம் ஆழ்கடல் போதைப்பொருள் விநியோக வலையமைப்புகளைத் தடுக்க உதவுகிறது, மேலும் தீவிலிருந்து போதைப்பொருள் ஒழிப்பதற்கான தேசிய திட்டத்திற்கு இது ஒரு முக்கிய பங்களிப்பாகும்.
இந்த முறை கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களின் மதிப்பு 327 மில்லியன் என்று மதிப்பிடப்பட்டுள்ளதுடன் இந்த ஆண்டில் மட்டும், 687 கிலோ கிராம் ஹெராயின், 795 கிலோ கிராம் ஐஸ் மற்றும் 579 கிலோ கிராம் கெட்டமைன் ஆகியவை இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டன.