அனுமதி இல்லாமல் மதுபானம் வைத்திருந்த ஒருவர் கைது செய்ய கடற்படை உதவி
கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து இன்று (2020 ஏப்ரல் 10,) சிலாபம், விஜய கட்டுபொத்த பகுதியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, அனுமதி இல்லாமல் மதுபானம் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கொரோனா வைரஸின் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தீவு முழுவதும் ஊரடங்கு சட்டத்தை அரசாங்கம் விதித்துள்ள நிலையில், நாட்டில் சட்டவிரோதமாக போதைப்பொருள் மற்றும் மதுபான விற்பனையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை கடற்படை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இன்று (2020 ஏப்ரல் 10) கடற்படை மற்றும் ஆரச்சிகட்டுவ காவல்துறையினர் விஜய கட்டுபொத பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் பொது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வீட்டொன்று சோதனை செய்யப்பட்டதுடன் குறித்த விட்டிலிருந்து 46 மது பாட்டில்கள் மற்றும் 10 பீர் கேன்களைக் கண்டுபிடித்தனர். அனுமதி இல்லாமல் இந்த வகைப்படுத்தப்பட்ட மதுபானத்தை வைத்திருந்ததற்காக வீட்டில் இருவரை கைது செய்யப்பட்டார்.
இவ்வாரு கைது செய்யப்பட்ட நபர் 51 வயதான அதே பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டார். இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து ஆரச்சிகட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகிறது.