கடற்படையால் நிர்மானிக்கப்பட்ட மேலும் ஒரு கிருமிநாசினி அறை கொழும்பு தேசிய மருத்துவமனையில் நிறுவப்பட்டன

கடற்படை சமூக நலத் திட்டத்தின் கீழ் கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவினரால் உருவாக்கப்பட்ட மேலும் ஒரு கிருமிநாசினி அறை கொழும்பு தேசிய மருத்துவமனையில் வெளிநோயாளர் பிரிவின் பயன்பாட்டிற்காக (2020 ஏப்ரல் 10) ஆம் திகதி ஒப்படைக்கப்பட்டது.

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் நேரடி மேற்பார்வையில் மேற்கொள்ளப்படுகின்ற கடற்படை சமூக நலத் திட்டத்தின் கீழ் கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு உருவாக்கிய இந்த கிருமிநாசினி அறை கொழும்பு தேசிய மருத்துவமனையில் வெளிநோயாளர் பிரிவின் பயன்பாட்டிற்காக இன்று (2020 ஏப்ரல் 10) ஒப்படைக்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் கடற்படை தளபதியிடம் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், இந்த கிருமிநாசினி அறை ஒப்படைக்கப்பட்டது. மெலும் இந்த வைத்தியசாலைகளுக்கு ஏராளமான மக்கள் தினசரி வருகின்றதுடன் வைத்தியசாலைகளுக்கு வருகின்ற மக்களின் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களின் பாதுகாப்பிற்காக குறித்த கிருமிநாசினி அறை நிருவப்பட்டன.

கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு ஏற்கனவே இந்த வகையான கிருமிநாசினி அறைகளை தயாரித்து பல மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளது. மேலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக 'மெடி மேட்' (Medimate) என்ற தொலை கட்டுப்பாட்டு சாதனமொன்றும் உருவாக்கி, நெவில் பெர்னாண்டோ போதனா மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக கடற்படை ஒப்படைத்துள்ளது.