ஹெரொயின் கொண்ட ஒருவர் கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் காவல்துறை ஒருங்கினைந்து ஹெராயின் கொண்ட ஒருவரை சிலாவத்துர மல்வத்து ஒய பாலம் அருகில் 2020 ஏப்ரல் 09 ஆம் திகதி கைது செய்தது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு சூழ்நிலையை கட்டுப்படுத்த மகத்தான பங்களிப்பை வழங்குகின்ற கடற்படை, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளையும் தொடர்கிறது. அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் சிலாவத்துர பொலிஸாருடன் இனைந்து 2020 ஏப்ரல் 09 ஆம் திகதி மல்வத்துஒய பாலம் அருகில் மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேகமான ஒருவரை கண்காணித்தனர். அங்கு மேற்கொண்டுள்ள மேலதிக பரிசோதனையில், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான நபர் 2.55 கிராம் ஹெராயின் கொண்டு செல்வதை கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி, சந்தேகநபர், ஹெராயின் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை கைது செய்யப்பட்டன.

இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மன்னாரில் வசிக்கும் 26 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து சிலாவத்துரபொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.