கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் (02) கைது செய்ய கடற்படை உதவி
கடற்படை, இராணுவம் மற்றும் காவல்துறை இணைந்து 2020 ஏப்ரல் 09, அன்று மன்னார், தாரபுரம் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சாவுடன் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் பணியில் மகத்தான பங்களிப்பு செய்யும் கடற்படை, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளையும் தொடர்கிறது. அதன்படி, வடமத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள், இராணுவம் மற்றும் காவல்துறையினர் ஒருங்கிணைந்து மன்னார் தாரபுரம், சாலைத் தடையில் சந்தேகத்திற்கிடமாக சென்ற மோட்டார் சைக்கிளொன்று நிருத்தி சோதனை செய்தனர். குறித்த மோட்டார் சைக்கிளை மேலும் சோதனை செய்த போது, மோட்டார் சைக்கிளில் பயனித்த இரண்டு சந்தேக நபர்கள் வசமிருந்து 51.94 கிராம் கேரளா கஞ்சாவைக் கண்டுபிடிக்க முடிந்தது. அதன்படி, குறித்த சந்தேகநபர்கள் மற்றும் கேரள கஞ்சா கைது செய்யப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் 40 மற்றும் 43 வயதுடைய சிலாவத்துர பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் கேரள கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
|