சுய தனிமைப்படுத்தலை மீறிய ஜா-எல சுது வெல்ல பகுதியில் 28 பேர் கடற்படையால் கைது
ஜா-எல சுதுவெல்ல பிரதேசத்தில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 28 பேர் குறித்த சுய தனிமைப்படுத்தலை மீறியமை தொடர்பில் இன்று (2020 ஏப்ரல் 09) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜா-எல சுதுவெல்ல பிரதேசத்தை சேர்ந்த நிலந்தம்பி பிரசாத் தினேஷ் என்ற கூலி வாகன சாரதி தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொலிஸாரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவரிடம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகள் காரணத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் அவருடன் நேரடியாக தொடர்பு கொண்டிருந்த 28 நபர்களுக்கு, ஜா-எல பொது சுகாதார ஆய்வாளர் அலுவலகம் மூலம், தங்கள் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டனர். இருப்பினும், போதைப்பொருளுக்கு அடிமையான இவர்கள் விதிகளை மீறி அப்பகுதியில் பயணம் செய்து வருவதாக செய்திகள் வந்தது.
பாதுகாப்பு படையினரிடமிருந்து தப்பித்துக்கொண்டிருந்த இந்த குழுவினரைத் தேடி மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் சிறப்பு புலனாய்வு நடவடிக்கையொன்று மேற்கொண்டு இந்த 23 நபர்களையும் கைது செய்துள்ளது. இப்போது இந்த நபர்கள் ஜா-எல ஆவே மேரி தேவாலயதடதில் கடற்படை காவலில் உள்ளனர், இப்பகுதியில் உள்ள மக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இவர்கள் ஒலுவில் பகுதியில் அனைத்து வசதிகளும் கொண்ட கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு மாற்றப்படும்.
இந்த நடவடிக்கைக்கு ஜா-எல மரதமடு தேவாலயத்தின் தலைமை பூசாரி, ஜா-எல காவல்துறை மற்றும் ஜா-எல மாவட்ட மருத்துவ அதிகாரிகளும் உதவினர்.
|