புதையல் தோண்டிய நபர்கள் கடற்படையால் கைது
புத்தளம், எதலை, எம்புகுடெல்ல பகுதியில் 2020 ஏப்ரல் 08 ஆம் திகதி நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது புதையல் தோண்டிய 06 நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
ஊரடங்கு சட்டத்தின் போது இரகசியமாக நிகழ்த்தப்படுகின்ற சட்டவிரோத செயல்களைத் தடுக்க இலங்கை கடற்படை பல தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதேபோன்ற நடவடிக்கையின் போது, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் இந்த 06 சந்தேக நபர்களை எம்புகுடெல்ல பகுதியில் புதையல் தோண்டிய போது கைது செய்தனர். இந்த நடவடிக்கையின் போது ஏராளமான புதையல் தோண்டும் உபகரணங்கள் மற்றும் ஒரு லாரியும் கைது செய்யப்பட்டன.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் 38 முதல் 55 வயது வரையிலான எடலை மற்றும் நொரொச்சோலை பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் லாரி மற்றும் புதையல் தோணடிய உபகரணங்கள் கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.