முல்லைதீவு வட்டுவாக்கல் பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 04 பேர் கடற்படையினரால் கைது

ஊரடங்குச் சட்டம் விதிக்கப்பட்டுள்ள போது அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் மீன் மற்றும் காய்கறிகளை கொண்டு சென்ற இரண்டு கெப் வண்டிகளுடன் நான்கு நபர்களை (04) 2020 ஏப்ரல் 08 ஆம் திகதி முல்லைதீவு வட்டுவாக்கல் பகுதியில் அமைக்கப்பட்ட சாலைத் தடையில் கடமையில் இருந்த கடற்படை வீரர்களால் கைது செய்யப்பட்டது.

நாட்டில் பேரழிவு நிலைமை கட்டுப்படுத்த மற்றும் பொது மக்களின் பாதுகாப்பிற்காக தீவு முழுவதும் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறி சாலையில் பயணித்த இரண்டு கெப் வண்டிகள் கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரால் இலங்கை கடற்படை கப்பல் ‘கோட்டாபய’ நிருவனம் முன் நிருவப்பட்ட வட்டுவாக்கல் சாலைத் தடையில் தடுத்து நிறுத்தப்பட்டது. குறித்த வண்டிகளில் காய்கறிகள் மற்றும் மீன் ஏற்றப்பட்டிருந்தது. ஆனால் செல்லுபடியாகும் ஊரடங்கு உத்தரவு ஆவணங்கள் இல்லாமல் மீன் மற்றும் காய்கறிகள் கொண்டு செல்லப்படுவதால் குறித்த கெப் வண்டிகள் மற்றும் சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள், வாகனங்கள் மற்றும் வண்டியில் இருந்த மீன் மற்றும் காய்கறிகள் மேலதிக விசாரணைகளுக்காக முல்லைதீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. நாட்டில் இந்த பேரழிவு சூழ்நிலையில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கு ஆதரவளிக்காதவர்கள் மீது கடற்படை தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது.