தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக கடற்படையினரால் நடத்தப்பட்டு வரும் தொடர் இன்னிசை நிகழ்ச்சிகள்

அரசாங்கத்தால் கொரோனா வைரஸ் பரவுவதற்கான அதிக ஆபத்துள்ள மண்டலங்களாக பெயரிடப்பட்ட மாவட்டங்களில் உள்ள வீடுகளில் தங்கியிருக்கும் மக்களின் மன அழுத்தத்தைத் தவிர்க்க அரசாங்கம் மேற்கொள்ளும் நடைமுறைகளுக்கு ஆதரவாக கடற்படை 2020 ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் கொழும்பு பகுதியில் மாடி கட்டடங்களில் சுய தனிமைப்படுத்தப்பட்ட மக்களின் கவலை மற்றும் மன அழுத்தத்தை தவிர்ப்பதற்காக இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

அதன் படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இந்த தொடர் நிகழ்வுகளின் மற்றொரு நிகழ்வு, 2020 ஏப்ரல் 08 ஆம் திகதி மஹபாகே பிரைம் ரெசிடென்சி (Prime Residency) மற்றும் இங்குரு கடை சிறிமுத்து உயன மாடி வீட்டு வளாகங்கள் மையமாகக் கொண்டு நடத்தப்பட்டன.

இந் நிகழ்ச்சியின் போது, கொரோனா வைரஸைத் தவிர்ப்பதற்கான சுகாதார நடைமுறைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது, எதிர்காலத்திலும் இதே போன்ற திட்டங்களை ஏற்பாடு செய்ய கடற்படை திட்டமிட்டுள்ளது.