காலி மீன்வள துறைமுகத்தில் ஏற்பட்ட தீ அனர்த்தம் கட்டுப்படுத்த கடற்படையின் உதவி

காலி மீன்வள துறைமுகத்தில் பழுதுபார்க்கும் பணிகள் நடந்து கொண்டிருந்த பல நாள் மீன்பிடிக் படகில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினை கட்டுப்டுத்த 2020 ஏப்ரல் 08 ஆம் திகதி கடற்படையினர் மற்றும் காலி தீயணைப்பு படையணி நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.

அதன் படி, காலி மீன்வள துறைமுகத்தில் பழுதுபார்க்கும் பணிகள் நடந்து கொண்டிருந்த பல நாள் மீன்பிடிக் படகொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினை பற்றி தெற்கு கடற்படை கட்டளையின் செயல்பாட்டு அறைக்கு கிடைத்த தகவல்களின்படி தெற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்களினால் இத்தீயணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இத்தீயணைப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படை தீயணைப்பு பிரிவின் கடற்படை விரர்கள் மற்றும் 02 தண்ணீர் பவுசர்கள் கழந்துகொண்டன. இந்த தீயை கட்டுப்படுத்த காலீ தீயணைப்பு படையின் உதவியுடன் கடற்படையினர் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.

இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியாததால், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் காலி துறைமுக பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், நாட்டில் எந்தவொரு அவசர நிலையிலும் முன்னணியில் இருக்கும் இலங்கை கடற்படை, ஏதேனும் பேரழிவு ஏற்பட்டால் பொதுமக்களுக்கு உதவ தயாராக உள்ளது.