கடற்படை மேலும் பல கிருமி நீக்கும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது
நாட்டில் 'புதிய கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க கடற்படை மேற்கொண்ட பல கிருமி நீக்கும் திட்டங்கள் 2020 ஏப்ரல் 06 ஆம் திகதி மற்றும் 07 ஆம் திகதி, ஊர்காவற்துறை பகுதியில் மற்றும் கொழும்பு, ஓய்வூதியத் துறை ஆகிய இடங்கள் மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் கடற்படை வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (Chemical, Biological, Radiological and Nuclear) அவசரநிலை பதிலளிப்பு பிரிவு மூலம் இந்த கிருமி நீக்கும் செய்யும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் ஊர்காவற்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் வேண்டுகோளின் பேரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் சென்ற யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் பல இடங்கள் கடற்படை துணைத் தலைமை பணியாளர் மற்றும் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீரவின் மேற்பார்வையின் கிழ் கிருமி நீக்கும் செய்யப்பட்டன. மேலும், வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு இந்த அனைத்து இடங்களும் உள்ளடக்கி முறையாக கிருமி நீக்கும் செய்யப்பட்டன.
எதிர்காலத்திலும் வைரஸ் பரவுவதைத் தடுக்க பொது இடங்கள் மையமாகக் கொண்டு பல கிருமி நீக்கும் செய்யும் திட்டங்களை செயல்படுத்த கடற்படை திட்டமிட்டுள்ளது.
|