பொல்கொட மற்றும் பெந்தர ஆற்றில் ரோந்துப் பணிகளை கடற்படை பலப்படுத்தியது
பண்டாரகம அடலுகம பகுதியில் மற்றும் தர்கா டவுன் ஆகிய இடங்களிலிருந்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கண்டுபிடித்த பின்னர் அப் பகுதி மக்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி அப்பகுதியிலிருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொல்கொட மற்றும் பெந்தர நதிகளைப் பயன்படுத்தி இப்பகுதியில் உள்ளவர்கள் அருகிலுள்ள கிராமங்களுக்கு பயணிப்பது தடுக்க 2020 ஏப்ரல் 06 ஆம் திகதி முதல் கடற்படை பொல்கொட மற்றும் பெந்தர நதிகளில் இவ்வாரு ரோந்து பணிகளை தொடங்கியது.
பண்டாரகம அடலுகம பகுதியில் மற்றும் தர்கா டவுன் ஆகிய இடங்களிலிருந்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கண்டுபிடித்த பின்னர் அந்த பகுதிக்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டு அப் பகுதி மக்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பிற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்க அரசாங்கம் எடுத்துள்ள இந்த நடவடிக்கையை மீறிய அடலுகம மற்றும் தர்கா டவுன் பகுதியில் சிலர் பொல்கொட மற்றும் பெந்தர நதிகளைப் பயன்படுத்தி அருகிலுள்ள கிராமங்களுக்கு சென்ற காரணத்தினால் பிற பகுதிகளுக்கு கொரோனா வைரஸ் பரவுவதற்கான ஆபத்தை தடுக்க கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் உத்தரவுப்படி கடற்படை பொல்கொட மற்றும் பெந்தர நதிகளில் ரோந்து பணிகளை தொடங்கியது.
மேலும், பொது மக்களின் பாதுகாப்பிற்காக நாட்டின் பிற பகுதிகளிலும் இதேபோன்ற ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள கடற்படை தயாராக உள்ளது,
|