கடற்படை மருத்துவமனைகளில் நீண்டகால சிகிச்சை பெறும் நோயாளிகளின் மாதாந்திர மருந்துகளை அவர்களின் வீடுகளுக்கு வழங்கும் திட்டமொன்று கடற்படை செயல்படுத்தி வருகிறது.

ஓய்வுபெற்ற மற்றும் தற்போது பணியாற்றும் கடற்படை வீரர்கள் மற்றும் கடற்படை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் நாட்டில் உள்ள தற்போதைய சூழ்நிலையின் கீழ் மாதாந்திர மருந்துகளை பெறுவதுக்காக எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு காலி மற்றும் மாதர மாவட்டங்களில் வீடற்றவர்களுக்கு மருந்துகளை விநியோகிக்கும் திட்டமொன்று 2020 ஏப்ரல் 06 ஆம் திகதி மேற்கொள்ளபட்டது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தல்களின் கீழ் மற்றும் தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கச்சப கோட்டபய போலின் வழிகாட்டுதலின் கீழ், நீண்ட காலமாக சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு மருந்துகளை விநியோகிக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்தப்பட்டது. காலி மற்றும் மாதர மாவட்டங்களில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட கடைசி மருந்துகளை விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு வழங்கப்பட்டன.

பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் விநியோகம் தெற்கு கடற்படை கட்டளை மருத்துவ அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டதுடன் எதிர்காலத்திலும் இதே போன்ற நிகழ்ச்சிகளை நடத்த கடற்படை தயாராக உள்ளது.