இலங்கை கடற்படையின் கடலாமை பாதுகாப்பு திட்டத்தால் 13 கடலாமை குட்டிகள் கடலுக்கு விடுவிக்கப்பட்டன

இலங்கை கடற்படையின் கடலாமை பாதுகாப்பு திட்டத்தால் காலி முகத்திடல் கடற்கரையில் பாதுகாக்கப்பட்ட கடலாமை முட்டைகளிலிருந்து வெளிவந்த 13 கடலாமை குட்டிகள் இன்று (2020 ஏப்ரல் 06) கடலுக்கு விடுவிக்கப்பட்டன.

கடற்படைத் தளபதியும் கடல் மற்றும் சுற்றுச்சூழல் நட்பு திட்டக் குழுவின் தலைவருமான வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ், ஆபத்தான கடலாமை இனங்களைப் பாதுகாத்தல் மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்பின் பல்லுயிரியலைப் பாதுகாத்தல் ஆகியவற்றின் முதன்மை நோக்கத்துடன் கடற்படை பல கடலாமை பாதுகாப்பு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதன் படி காலி முகத்திடல் கடற்கரை பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் இலவச மண்டலமாக சுத்தம் செய்து பராமரித்ததன் விளைவாக கடலாமைகள் கடற்கரையில் முட்டையிட்டதை கடற்படை கண்டறிந்ததுடன் கடற்படைத் தளபதியின் நேரடி மேற்பார்வையின் கீழ், இந்த முட்டைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது, இதன் விளைவாக 2020 பிப்ரவரி 5, அன்று கடலாமை முட்டைகளிலிருந்து வெளிவந்த 83 கடலாமை குட்டிகள் கடலுக்குள் விடப்பட்டதுடன் மேலும் 13 கடலாமைக் குட்டிகள் 2020 ஏப்ரல் 06 ஆம் திகதி கடலுக்கு விடுவிக்கப்பட்டன.

கூடுதலாக, இலங்கை கடற்படை கடல் வளங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அடையாளம் கண்டுள்ளதுடன், மிகவும் திறமையான பணியாளர்கள் கொண்ட கடற்படை நாட்டின் முழு கடலோரப் பகுதியையும் உள்ளடக்கி கடல் வளங்களை பாதுகாப்பதில் பெரும் பணியை மேற்கொண்டு வருகிறது.