வீட்டிலேயே தனிமைப்டுத்தி வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்காக கடற்படை மேற்கொண்டுள்ள பொழுதுபோக்கு திட்டம்
கொரோனா வைரஸ் பரவுவதற்கான அதிக ஆபத்துள்ள மண்டலங்களாக அரசாங்கத்தால் பெயரிடப்பட்ட மாவட்டங்களில் உள்ள வீடுகளில் தங்கியிருக்கும் மக்களின் மன அழுத்தத்தைத் தவிர்ப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடைமுறைகளுக்கு ஆதரவாக கடற்படை 2020 ஏப்ரல் 05 அன்று கொழும்பு பகுதியில் உள்ள மாடி கட்டடங்களில் சுய தனிமைப்படுத்தப்பட்ட மக்களின் கவலை மற்றும் மன அழுத்தத்தை தவிர்ப்பதற்காக ஒரு இசை நிகழ்ச்சி நடத்தியது. .
கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகளைப் போலவே, இலங்கையிலும் ஏராளமான மக்கள் தங்களுடைய வீடுகளுக்குள் தனிமைப்டுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இவர்களின் மன அழுத்தத்தைத் தவிர்ப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடைமுறைகளுக்கு ஆதரவாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் உத்தரவின் பேரில், இலங்கை கடற்படை 2020 ஏப்ரல் 5 ஆம் திகதி கொழும்பு மாவட்டத்தில் மாடி கட்டடங்களில் வசிப்பவர்களுக்காக ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தியது. குறிப்பாக நாட்டில் இந்த பேரழிவு சூழ்நிலையில் மிகுந்த நெரிசலால் சூழப்பட்ட தங்கள் வீடுகளில் அமைதியாக தங்கியிருப்பதும் முப்படை, பொலிஸ் மற்றும் சுகாதார சேவை ஆகிய அத்தியாவசிய சேவைகளைச் செய்வதற்கு தங்கள் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் மக்களைப் பாராட்டுவதும் ஊக்குவிப்பதும் இந்த நிகழ்ச்சிகளில் நோக்கமாகும்
மேலும், நிகழ்ச்சியின் போது கொரோனா வைரஸைத் தவிர்ப்பதற்கான சுகாதார நடைமுறைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது, மேலும் குடியிருப்பில் வசிக்கும் மக்கள், தங்களுடைய வீடுகளிலிருந்து கடற்படையின் இந்த திட்டத்திற்கு மிகவும் ஆதரித்தனர். இதுபோன்ற திட்டங்கள் மூலம் நாட்டின் தற்போதைய நிலைமையைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் கடற்படை அரசாங்கத்திற்கு உதவுகிறது.
|