ஊரடங்குச் சட்டத்தை மீறிய மேலும் இருவர் கடற்படையினரால் கைது

ஊரடங்குச் சட்டத்தை மீறிய இரண்டு பேர் (02) 2020 ஏப்ரல் 04 அன்று ஆருகம்பை முஹுது மகா விஹாரய சந்திக்கு அருகே அமைக்கப்பட்ட சாலைத் தடையில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

நாட்டில் பேரழிவு நிலைமை கட்டுப்படுத்த மற்றும் பொது மக்களின் பாதுகாப்பிற்காக தீவு முழுவதும் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறிய இருவரை தென்கிழக்கு கடற்படைக் கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் கைது செய்யப்பட்டது. குறித்த சந்தேக நபர்கள் மோட்டார் சைக்களில் பயணித்த போது ஆருகம்பை முஹுது மகா விஹாரய சந்திக்கு அருகே அமைக்கப்பட்ட சாலைத் தடையில் கடமையில் இருந்த கடற்படை வீரர்களால் கைது செய்யப்பட்டனர். மேலதிக விசாரணையில் 02 நபர்களும் பொத்துவில் பகுதியில் வசிப்பவர்கள் என்பது தெரியவந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மோட்டார் சைக்கிளுடன் பொத்துவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் திட்டங்களை ஆதரிப்பது பொதுமக்களின் கடமை மற்றும் பொறுப்பாகும். இவ்வாரான பொறுப்பற்றவர்கள் மீது கடற்படை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்.