கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த றாகம வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் கடற்படை பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடற்படை நடத்திய திட்டங்களின் விரிவாக்கமாக, றாகம வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலை வளாகத்தில் கடந்த சில நாட்களில் பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்படுகின்ற இந்தத் திட்டங்களின் கீழ், நாட்டிற்காக தொடர்ச்சியான அர்ப்பணிப்பு சேவையில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு உணவு வழங்குவதற்கான ஒரு திட்டம் கடற்படையினரால் நடத்தப்பட்டது. மேலும், கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக மாற்றப்பட்ட பகுதியில் ஒரு சி.சி.டி.வி அமைப்பு கடற்படையால் நிறுவப்பட்டது இது மருத்துவ ஊழியர்களுக்கு நோயாளிகளை தூரத்தில் இருந்து கவனிக்கவும் சிகிச்சைகள் பரிந்துரைக்கவும் உதவுகிறது. மேலும், நிலையான கிருமி நீக்கும் நடைமுறையைப் பின்பற்றி கடற்படையின் வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (Chemical, Biological, Radiological and Nuclear) பிரிவினால் வைத்தியசாலை வளாகம் பல நாட்கள் கிருமி நீக்கம் செய்யப்பட்டது.
|