மூத்த குடிமக்களுக்கு தனது ஓய்வூதியத்தைப் பெற கடற்படை ஆதரவு
தீவு முழுவதிலும் இயற்றப்பட்ட ஊரடங்குச் சட்டம் காரணமாக தனது ஓய்வூதியத்தைப் பெற போக்குவரத்து வசதிகள் இல்லாமல் இருந்த மூத்த குடிமக்களுக்கு 2020 ஏப்ரல் 02 மற்றும் 03 ஆம் திகதிகளில் கடற்படை தனது ஆதரவை வழங்கியுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தை விதித்துள்ள பின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத மக்களுக்கு உதவ கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் கடற்படை பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, 2020 ஏப்ரல் 2 மற்றும் 3 ஆம் திகதிகளில், மேற்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் வடக்கு கொழும்பு மற்றும் காலி பகுதிகளில் வீட்டுகளில் இருந்து மற்றும் முதியோர் இல்லங்களில் இருந்து தனது ஓய்வூதியத்தைப் பெறுவதற்காக நகரத்திற்குச் செல்ல முடியாத நிலையில் இருந்த மூத்த குடிமக்களுக்கு அவர்களின் ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த திட்டம் மூத்த குடிமக்களுக்கு தனது ஓய்வூதியம் பெற மிகவும் ஆறுதலாக இருந்தது. மேலும், இந்த திட்டம் எதிர்வரும் நாட்களிலும் தொடர திட்டமிடப்பட்டுள்ளது.