கொரோனா நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்ற நபர்களை சோதனை செய்வதற்காக நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை கடற்படையால் புதுபிக்கப்பட்டது
இலங்கை கடற்படை இன்று (2020 ஏப்ரல் 2,) கொரோனா நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்ற நபர்களின் எச்சில் மற்றும் இரத்த மாதிரிகள் சோதனை செய்வதுற்கு தேவையான வசதிகள் கொண்ட ஒரு இடத்தை நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையில் தயாரித்தது. மேலும் மருத்துவமனையில் வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்கள் பிரிவில் ஒரு சி.சி.டி.வி (CCTV System) அமைப்பையும் கடற்படையால் நிறுவப்பட்டது.
கொரோனா வைரஸால் பாதித்ததாக சந்தேகிக்கப்படும் நபர்களின் எச்சில் மற்றும் இரத்த மாதிரிகள் சரிபார்க்க நெவில் பெர்னாண்டோ மருத்துவமனைக்கு வசதிகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்ற கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் மருத்துவர்களுக்கு இடையில் தொடர்பு கொள்ள சி.சி.டி.வி அமைப்பை (CCTV System) கடற்படை அமைத்துள்ளது. இந்த திட்டம் கடற்படையால் இன்று (2020 ஏப்ரில் 02) தொடங்கியதுடன் மேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட சிவில் பொறியியல் மற்றும் மின் பொறியியல் கடற்படை பணியாளர்களால் இயக்கப்படுகிறது.
மேலும், இந்த பழுதுபார்ப்புகளை முடித்து மருத்துவமனையின் தேவைகளை மிக விரைவாக பூர்த்தி செய்ய கடற்படை இப்போது செயல்பட்டு வருகின்றதுடன் நாட்டில் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த அரசாங்கத்தின் கூட்டு பொறிமுறையை வலுப்படுத்தவும் கடற்படை பல நடவடிக்கைகள் மெற்கொண்டு வருகிறது.
|