மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வெடிபொருட்களைக் கொண்ட இரண்டு நபர்கள் கடற்படையால் கைது
2020 ஏப்ரல் 01 ஆம் திகதி குச்சவேலி பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வெடிபொருட்களைக் கொண்ட இரண்டு நபர்கள் (02) கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.
இலங்கையைச் சுற்றியுள்ள பெருங்கடலில் மீன்வளம் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க இலங்கை கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் குழு, குச்சவேலி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளொன்று சோதனை செய்ததுடன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரிடமிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் ஜெலிக்னைட் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட நான்கு (04) சார்ஜர்கள் கண்டுபிடிக்கப்பட்டன, மேலும் குறித்த நபர்கள், வெடிபொருள் மற்றும் மோட்டார் சைக்கிள் கடற்படையால் கைது செய்யப்பட்டன.
இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 18 மற்றும் 37 வயதுடை குச்சவேலி வடலிகுளம் பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். மேலும் சந்தேக நபர்கள் வெடிபொருள் மற்றும் மோட்டார் சைக்கிள் மேலதிக விசாரணைகளுக்காக குச்சவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.