பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட முதல் குழு மையத்தை விட்டு வெளியேறியது.

பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இரண்டு வார கால மருத்துவ பரிசோதனைகளை நிறைவு செய்த முதல் குழு மருத்துவ பரிசோதனை சான்றிதல்களுடன் இன்று 2020 ஏப்ரில் 01ஆம் திகதி வெளியேறினர்.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த அரசாங்கத்தால் மேற்கொள்கின்ற கூட்டு பொறிமுறையை வலுப்படுத்த, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தலின் கீழ் பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் நான்கு மாடி கட்டிடமொன்று தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக தயார் செய்யப்பட்டது. இந்த மையத்தில் தங்களது தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை வெற்றிகரமாக முடித்த முதல் குழுவாக, ஒரு (01) ஜப்பானிய பெண் மற்றும் இரண்டு (02) பிரெஞ்சு நாட்டவர்கள் 2020 ஏப்ரல் 01 அன்று மையத்தை விட்டு வெளியேறினர். மேலும் இரண்டு இலங்கையர்கள் இன்று (2020 ஏப்ரல் 02) தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேறினர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நிறைவு செய்துள்ளார்கள் என்பதை உறுதிப்படுத்த வழங்கப்படுகின்ற தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழை தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கச்சப போல் வழங்கினார்.

அதன்படி, 64 இலங்கை நபர்கள் இன்னும் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் உள்ளனர். கடற்படை ஏற்கனவே பல தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை நிறுவியுள்ளதுடன், நாட்டில் வைரஸ் பரவாமல் தடுப்பதில் அரசாங்கத்திற்கு உதவ கடற்படை பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.