ஊரடங்குச் சட்டத்தை மீறிய மேலும் இரண்டு பேர் (02) கடற்படையால் கைது
ஊரடங்குச் சட்டத்தை மீறிய மேலும் இரண்டு பேர் (02) ஆருகம்பை முதல் கொத்துக்கால் பகுதி வரை மேற்கொள்ளபட்ட ரோந்துப் பயணத்தின் போது 2020 மார்ச் 31 அன்று கடற்படையால் கைது செய்யப்பட்டது.
நாட்டில் பேரழிவு நிலைமை கட்டுப்படுத்த மற்றும் பொது மக்களின் பாதுகாப்பிற்காக தீவு முழுவதும் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறிய இரண்டு நபர்கள் 2020 மார்ச் 31 அன்று தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர், கைது செய்யப்பட்ட நபர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது ஆருகம்பை முதல் கொத்துக்கால் பகுதி வரை ரோந்துப் பயணத்தின் ஈடுபட்ட கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட நபர்கள் 20 மற்றும் 27 வயதுடைய பொத்துவில் பகுதியில் வசிப்பவர்கள் என கண்டறியப்பட்டன. கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பொத்துவில் பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் திட்டங்களை ஆதரிப்பது பொதுமக்களின் கடமை மற்றும் பொறுப்பாகும். இவ்வாரான ஊரடங்கு விதிமுறைகளை மீறும் பொறுப்பற்ற நடவடிக்கைகள் தடுக்க கடற்படை தொடர்ந்து செயல்படுகிறது.