கேரள கஞ்சா மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படும் வெடிபொருட்களை வைத்திருந்த ஒரு நபர் கடற்படையால் கைது
2020 மார்ச் 31, அன்று பொடுவக்கட்டு கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, கேரள கஞ்சா மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படும் வெடிபொருட்களை வைத்திருந்த ஒருவரை கடற்படை கைது செய்தது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு சூழ்நிலையை கட்டுப்படுத்த மகத்தான பங்களிப்பை வழங்குகின்ற கடற்படை, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளையும் தொடர்கிறது. அதன்படி, 2020 மார்ச் 31 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் பொடுவக்கட்டு கடற்கரை பகுதியில் மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று சோதனை செய்தனர். அங்கு படகில் இருந்தவரிடமிருந்து 38 சிறிய பார்சல்களில் அடங்கிய 43 கிராம் கேரள கஞ்சா, மூன்று வாட்டர் ஜெல் குச்சிகள், மூன்று (03) சேவை நூல்கள், மூன்று மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் குறித்த நபர் கேரள கஞ்சா, வெடிபொருள், டிங்கி படகு மற்றும் பிற மீன்பிடி உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டார்.
இவ்வாரு கைது செய்யபட்ட சந்தேக நபர் புல்மோட்டை பகுதியில் வசிக்கும் 18 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர், கேரள கஞ்சா, வெடிபொருட்கள், டிங்கி படகு மற்றும் பிற மீன்பிடி உபகரணங்கள் ஆகியவை குச்சவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.