கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் (02) கைது செய்ய கடற்படை ஆதரவு
கடற்படை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவுடன் இணைந்து 2020 மார்ச் 30, அன்று மன்னார், பேசாலை, கட்டிகுடிஇருப்பு பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு சென்ற இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் பணியில் மகத்தான பங்களிப்பு செய்யும் கடற்படை, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளையும் தொடர்கிறது. அதன்படி, 2020 மார்ச் 30 ஆம் திகதி, மன்னார், பேசாலை, கட்டிகுடிஇருப்பு பகுதியில் மன்னார் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்துடன் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையின் போது, சாலையில் சந்தேகத்திற்கிடமாக சென்ற மோட்டார் சைக்கிளொன்று கடற்படை கண்கானித்துள்ளது. குறித்த மோட்டார் சைக்கிளை மேலும் சோதனை செய்த போது, மோட்டார் சைக்கிளில் பயனித்த இரண்டு சந்தேக நபர்கள் வசமிருந்து 50 கிராம் கேரளா கஞ்சாவைக் கண்டுபிடிக்க முடிந்தது. அதன்படி, குறித்த சந்தேகநபர்கள் மற்றும் கேரள கஞ்சா கைது செய்யப்பட்டது
இவ்வாரு கைது செய்யப்பட்ட நபர்கள் அதே பகுதியில் வசிக்கின்ற, 19 மற்றும் 23 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் கேரள கஞ்சா ஆகியவை மேலதிக விசாரணைகளுக்காக பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. நாட்டின் பேரழிவுகரமான சூழ்நிலைக்கு மத்தியிலும் இதுபோன்ற கடத்தலைச் செய்யும் நபர்களைக் கண்டுபிடிப்பதற்காக கடற்படை வழக்கமான சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.